கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைதரசன் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கையில் இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவுவதாக உறுதியளித்தது.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.