வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் 70 வயதுடையவர் என்பதுடன் அவர் தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நேற்றுமுன்தினம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் சிகிச்சைக்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply