இலங்கை அரசாங்கம் தம்மை ஏமாற்றும் அளவிற்கு தாம் அடிபணிந்து போகமாட்டோம் என தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.
தங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும் என இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வடக்கு என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
கிழக்கில் சரித்திர ரீதியாகத் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் தங்கள் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.