இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்த உரிமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாத்துக்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகவே தமிழர்களுக்குக் கிட்டிய அரசியல் உரிமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைநழுவ விட்டது என சாடியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார் என சுட்டிக்காட்டியுள்ளார்.