சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயன்படுத்திய “நரசங்கார” என்ற வார்த்தையின் முதல் நிலை அர்த்தம் பாரிய மனிதப் படுகொலை என்றும் அதனை இனப்படுகொலை என்று குறிப்பிட முடியும் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேசமயம் அமைச்சரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளமை சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டியதை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸும் தி.மு.கவும் காரணம் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அமித்ஷா இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் ஒரு பகுதி எனவும் குறிப்பிடுகின்றனர்.

1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் திகதி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply