வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமரவீர இந்த அறிவுறுத்தல்களை கமநல காப்புறுதி சபையின் தலைவர் டபிள்யூ.எம்.எம்.பி. வீரசேகர, வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அறிவித்ததாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு ஹெக்டேர் சாகுபடி சேதங்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்காக 1.7 பில்லியன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமரவீர, வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேத அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து அதற்கான இழப்பீட்டை கமநல காப்புறுதி சபையின் ஊடாக வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது இழப்பீடாக ஒருஹெக்டேருக்கு ஒரு லட்சம் வழங்கப்படுவதாகவும், சில பகுதிகளில் நிலைமை வேறுபட்டதாகவும் காணப்படுவதால் தொகையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
அதுவரை நாங்கள் ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்குவோம் என்றார்.