இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியாறு பகுதியைச் சேர்ந்த 50 வயதான பெண்ணும், 27 வயதான ஆணுமே இவ்வாறு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாலியாறு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.