ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது.
லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.
800 கிலோ எடைகொண்ட விண்கலம் அடுத்த 5 நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த விண்கலம், வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் 3 முதல் 7 நாட்களுக்குள் தரையிறங்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சந்திரயான்- விண்கலம் நிலவின் தெற்குப் பகுதியில் தரையிறங்க உள்ள நிலையில், ரஷ்யாவின் லுனா-25 விண்கலமும் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.