மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து சென்ற வேலைவாய்ப்பு பணியகத்தினர் முற்றுகையிட்டு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிகு அனுப்புவதாகத் தெரிவித்து, ஒருவரிடம் 4 லட்சத்து 50,000 ஆயிரம் ரூபா வீதம் 22 பேரிடம் ஒரு கோடி ரூபா பணமோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வேலைவாய்ப்பு பணியகத்தில் போலி முகவருக்கு எதிராக இருவர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டதில் குறித்த நபர் தலா 4 லட்சம் ரூபா வீதம் 22 பேரிடம் பணமோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் உதவியுடன் குறித்த போலி முகவரின் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.