குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ ரக் வாகனங்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்களும் பொங்கல் நிகழ்வை மேற்கொள்வதற்காக குருந்தூர் மலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பௌத்த விகாரையில் வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒரு மத வழிபாட்டிற்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களின் மதவழிபாடுகளை தடுப்பதற்கு தடை கட்டளை வழங்க முடியாது என காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply