குருந்தூர் மலையில் நிலவும் பதற்றம் – தமிழ்த் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7 நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பௌத்த மத நடவடிக்கைகளுக்கு அவ்வாறான நிபந்தனைகளை விதிக்கவில்லை என  குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டுள்ளன.

உதவிப் பணிப்பாளரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவு கோரியதை அடுத்து இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையினால் முரண்பாடுகள் ஏற்படுமென்ற அச்சத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும்
பௌத்த தரப்பினருக்கு எந்த தடையும் விதிக்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பொங்கல் பண்டிகைக்கு கூடும் மக்கள் ஏனைய தரப்பினருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என முல்லைத்தீவு பொலிஸாரின் ஊடாக உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி.ஜயதிலக்க பொங்கல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, அப்பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில்  “பௌத்தர் எழுக” எனும் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply