குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சினை, காணிப்பிரச்சினை, அரசியல் பிரச்சினை என மூன்று விடயங்கள் உள்ளடங்கி உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இது ஒரு சிக்கலான விடயம், இதனை கவனமாக கையாள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிடின் இது ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்கா அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லைத்தீவு குருந்தூர்மலை சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவ அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.