ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் தற்போது உயர்தரத்தில் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்தரத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு காலம் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இதேவேளை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 5400 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த பட்டதாரிகளில் 1700 பேர் தேசிய பாடசாலைகளில் இணைக்கப்படவுள்ளனர். 

இவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படவுள்ளன.

அத்துடன், பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்க வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply