இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதற்கமைய இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கப்பல் ஒன்றின் விஜயத்தை அனுமதிக்குமாறு சீனா விடுத்த கோரிக்கையை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பரிசீலித்து வரும் நிலையிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், திருகோணமலையில் இந்தியாவுடன் இணைந்து முதலீடு செய்யப்பட்டுள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தின் கூட்டு அபிவிருத்தியையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் தாங்கி ஒப்பந்தம் 2022 ஜனவரியில் திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply