ராஜபக்‌ஷக்களை அடித்து விரட்டுங்கள் – கொந்தளிக்கும் மேர்வின் சில்வா!

ராஜபக்‌ஷக்கள் இனியும் அவசியமில்லை எனவும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் சில அழுகிய குப்பைகளை வைத்துக்கொண்டு காக்கைகள் சிலர் சுற்றி நின்றுகொண்டு கரைந்துகொண்டு இருக்கின்றன எனத் தெரிவித்த அவர், இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரதிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளிலும் கீழ்த்தரமான வேலைகள் செய்யாத,  உயர்ந்த, கௌரவரமான நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியென கூறிக்கொண்டு நாமல் ராஜபக்‌ஷவை தலையில் சுமந்துகொண்டு போகின்றனர் என சுட்டிக்காட்டிய அவர்,  இனியும் ராஜபக்‌ஷக்கள் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களை அடித்து விரட்டுங்கள் எனத் தெரிவித்ததோடு, ராஜபக்‌ஷவின் பிள்ளைகள் தாஜுதீனுக்கு செய்ததைப் போன்று என் மகனுக்கும் செய்ய முயன்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இறுதியில் மகன் தனது திறமையால் அதில் இருந்து தப்பித்துள்ளான் எனதம் தெரிவித்துள்ள நிலையில்,  அப்பாவின் அதிகாரத்தில் அனைத்து கீழ்தரமான வேலைகளையும் அவர்கள் செய்துள்ளனர் என கடுமையாக சாடியுள்ளார்.

இவர்கள் பெருந்திருடர்கள். இவர்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள் என மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, கடந்த காலத்தில் தேசிய ரூபவாஹினிக்குள் தன்னை ராஜபக்‌ஷக்களே அனுப்பி வைத்தனர் என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு சென்றதும் தன் மீது தாக்குதல் நடத்த அவர்கள் உத்தரவிட்டதுடன், தன்னையும் பதிலுக்கு தாக்குதல் நடத்துமாறு கோரினர் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ராஜபக்‌ஷக்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தன்னை சின்ன சிங்கம் என கூறிக்கொண்டு இருக்கின்றார் எனத் தெரிவித்த அவர், இவரை அப்படி கூற முடியாது எனவும் நாயென்றும் கூற முடியாது எனத் தெரிவித்ததோடு,  இவர் பயந்த கோழியே. இங்கு சிங்கம் என்பதே இல்லை. அப்பாவின் அதிகாரத்தில் இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தியே செயற்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply