ஈஸ்டர் தாக்குதலை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மௌலானா – பிள்ளையான் குற்றச்சாட்டு!

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

உயித்தஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவம் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார்.

ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அசாத் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த பின்னணியில், சில மத நிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களைக் காப்பாற்றுவதற்காக அசாத் மௌலான மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே சனல் 4 நிறுவனத்திற்கு சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply