கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் வருடாந்த அமர்வுகளுக்காக நியூயோர்க் செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.