மாஸாக வெளியாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ திரைப்படத்தின் டீஸர்…!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், ‘அசால்ட் சேது’ என்ற பெயரில் படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

இவ்வாறு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார்.

அதன்படி ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டு வெளியிட்டது.

இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply