ராஜபக்ஷ குடும்பத்தையும் இறுதி யுத்தத்தையும் இணைத்து பேசுவது வேடிக்கையானது!

ராஜபக்ச குடும்பத்தினரையும், இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சனல் 4 காணொளி தொடர்பில் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருடன் அரசியல் ரீதியிலான உறவு காணப்படும் நிலையில் அவர்களே தன்னை சிறையிலிருந்து விடுவித்ததாக கூறப்படும் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த கருத்துக்கள் நீதிமன்றத்தினை அவமானப்படுத்தும் செயலாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல எனவும் 2008 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்த காலம் முஸ்லிம்களோடு இணைந்தே ஆட்சியை அமைத்திருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரானவன் பிள்ளையான் என யார் கூறினாலும் தான் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் அபிவிருத்திக்காக பல சேவைகளை செய்திருப்பதாகவும், இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே பிள்ளையான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்ற விமர்சனங்களை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply