தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

அருகில் இருந்து கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தயாசிறி நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என உடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து விலக்குவதற்கு மஹிந்த அமரவீரவே சில செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒவ்வொரு விடயங்களையும் கூறி அவரை துரத்தியதாகவும் தயாசிறி தெரிவித்திருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த அமரவீர, மைத்திரிபால சிறிசேன அரசியலில் குழந்தை அல்ல எனவும் அவர் சிரேஸ்ட அரசியல்வாதி என்பதோடு, கட்சியின் செயலாளர் என்ற ரீதியிலும் தலைவர் என்ற ரீதியிலும் பொறுப்புடன் செயற்பட்டவர். அவர் மற்றவர்களின் கதைகளை கேட்டு செயற்படுபவர் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைகள் கடந்த 7 மாதங்களுக்கு முன் எழுந்தவை. தங்கள் வாயை காப்பாற்றிக்கொண்டால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவருடன் தலைவர் என்று ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் இந்த நிலை தான் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அருகில் இருந்து கழுத்தை அறுக்கும் முன் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் உண்மை விடயங்களை அறிந்துக்கொள்ள முடியும். அவர் மீது தற்போதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply