உயிர்த்த ஞாயிறு விவகாரம் – பேராயரின் கருத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணைதேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் உள்ளக விசாரணை மட்டுமே போதுமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய புனித மைக்கல் தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டால், அரசியல் அழுத்தத்தின் கீழ் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால் சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இவை அனைத்தும் வெளிப்படையான வழிமுறைகளின் மூலம் செய்யப்பட வேண்டும் என பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 2022 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை சபையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணை தேவை என பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தாமதமாகியதால் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply