நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்ட யோசனை!

இலங்கை நாடாளுமன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply