பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் வெள்ளிக்கிழமையன்று மக்கள் முகமது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இது மஸ்துங் நகரில் நடைபெற்ற மதக் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகிப்பதுடன் அதிகாரிகள் அவசர நிலையையும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, மஸ்துங் நகர காவல்துறை அதிகாரிகள் இருவர் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.