முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக அணிதிரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக முல்லைத்தீவு நகர சுற்றுவட்டம் வரைசென்று மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடம் முன்பாக வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

