மக்களின் மின் கட்டணத்தை செலுத்தத் தயாராகியுள்ள சனத் நிஷாந்த!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டண பிரச்சினையை தீர்த்து வைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தீர்மானித்துள்ளார்.

எனவே, தனது சனத் நிஷாந்த அறக்கட்டளையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் மின் கட்டணத்தைச் செலுத்த தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 077 7449492 என்ற இலக்கத்தில் வட்ஸ்அப் ஊடாகவோ அல்லது அறக்கட்டளையின் 032 2259130 என்ற இலக்கத்திற்கு அழைத்தோ, தமது மின் கட்டணத்தின் புகைப்படத்தை அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply