இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முந்நூற்று நான்கு எச் எஸ் குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள் இவ்வாறு நீக்கப்படும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த முடிவை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.