திருடப்பட்ட கடவுசீட்டுடன் சீனப்பெண் ஒருவர் இலங்கையில் கைது!

தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் 53 வயதான சீனப் பெண் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது குடிவரவு  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு 9.20 மணியளவில் சீனாவின் குன்மிங்கில் இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பெண் வழங்கிய கடவுச்சீட்டு, சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்டுள்ள திருடப்பட்ட மற்றும் தொலைந்த கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply