கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிகின்றனர்.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கூட்டம் நேற்றையதினம் காலை இடம்பெற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதின் இரு அணியினருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் இரு பகுதியினரும் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உட்பட 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு குறித்த 7பெரும் பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை , அவர்கள் இணக்க சபையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.