மைத்திரி உள்ளிட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை முழுமையான நட்டஈடு வழங்கப்படாத நிலையில் டிசம்பர் 30ஆம் திகதிக்குள் அவற்றினை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குறித்த அறிக்கையை டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply