சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலான் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வடமத்திய கடற்படை கட்டளை மற்றும் வடக்கு கடற்படை கட்டளை என இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய 4 இந்திய இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த இரண்டு கடற்படைக் கட்டளைகளும், இந்திய இழுவைக் கப்பல்களிகனை விரட்டுவதற்காக அவர்களது விரைவுத் தாக்குதல் மற்றும் கடலோர ரோந்துக் கப்பல்களை அனுப்பியுள்ளன.

இதேவேளை,வட மத்திய கடற்படை கட்டளை 8 இந்திய மீனவர்களுடன் 1 இந்திய இழுவை படகினை பிடித்து வைத்துள்ளதுடன் கோவிலான் கடற்பரப்பில் அத்துமீறிச் சென்ற 13 இந்திய மீனவர்களுடன் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளை வடக்கு கடற்படை கட்டளையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுகள் தலைமன்னார் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படடுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply