இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு மரண தண்டனை!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி மன்னார், பரப்புகண்டல் இராணுவ முகாமில் இரண்டு சக இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் நேற்று வழங்கியுள்ளார்.

தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் தனிப்பட்ட தகராறு காரணமாக பரப்புகண்டல் முகாமில் மூன்று சக இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் மற்றையவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னார் முருங்கன் பொலிஸாரின் ஊடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கொலைகள் இடம்பெற்று 14 வருடங்களின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply