போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.92 மில்லியன் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் பறிமுதல்!

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிமிக்க சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.

முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு அசங்க, லடியா மற்றும் குடு ஸ்ரீயானி ஆகிய மூவரிடம் இருந்த சட்டவிரோதமான சொத்துக்களை கைப்பெற்ற சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், 3 பேருந்துகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், மூன்று மாடி வீடு, 4 மனைகள், 50 பவுன் தங்கம் மற்றும் ரூ. 123,000 ரொக்கம் ஆகியவை சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 92 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply