இன்று மாலை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள் டீன்ஸ் வீதி, குலரத்ன மாவத்தை, டி.பி. ஜயா மாவத்தை மற்றும் கொழும்பில் உள்ள பல வீதிகள், வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, மதுஷன் சந்திரஜித் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் 7 உறுப்பினர்கள்,கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராகவே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.