சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் இந்திய கடலோர பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சோதனையின் போது , பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படகையும் அதிலிருந்து சுமார் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply