இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைந்த அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர் வரவேற்றனர்.

கடற்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி குறித்த மீனவர்கள் கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

 இலங்கை நீதிமன்றம் அவர்களை இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், பின்னர் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 


You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply