காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்று கூடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, சம்பவ இடத்தில் சிலர் சூது விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அவர்களுடனே நியாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நியாஸ் என்ற நபர், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சஹ்ரானின் சகோதரியின் கணவர் என்று காவல்துறையினரின் கூற்றுப்படி கண்டறியப்பட்டது.
2019 ஏப்ரல் 21 அன்று 350 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியக் குழுவான நேஷனல் தவ்ஹீத் ஜமாத் இன் பிரிந்து சென்ற உறுப்பினர்களின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் ஆவார்.