மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.