நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் நரேந்திர மோதியின் பதவி நீடிப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.
முன்னமே எரிசக்தி, துறைமுகம் விமான சேவை ஆகிய அனைத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் தீவிரம் அடைத்துள்ள நிலையில் திருகோணமலை எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளது.
இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும். இது இலங்கையின் பொருளாதார ரீதியில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.