அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை சீர்குலைத்து, அனுபவமற்ற தரப்பினரிடம் கையளித்து நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்வதா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.