எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply