தான் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(01) அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னரே டயானா கமகே இதனைத் தெரிவித்துள்ளார் .