நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் இரகசிய சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.