தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது.

இந்நிலையில், இதுவரை தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாத அரசு அலுவலர்கள் இன்று தபால் வாக்குகளை பயன்படுத்த முடியும் என்பதுடன், அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பித்த எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் தபால் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply