இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் போலியானவை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தாம் மத்திய வங்கியில் காணப்படும் தொழில்வாய்ப்புக்கள் எதையும் மூன்றாம் தரப்பு தளங்களில் விளம்பரப்படுத்துவதில்லை.

தமது இணையத்தளத்தின் தொழிவாய்ப்புப் பிரிவின் கீழும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே இது தொடர்பான தகவல்களை வெளியிடுகின்றோம்.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி சார்பில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வேறு வலைத்தளங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ அதிகாரமளிக்கப்படவில்லை.

மேலும் https://www.cbsl.gov.lk/en/careers என்ற உத்தியோகபூர்வ இலங்கை மத்திய வங்கியின் தொழில்வாய்ப்பு பக்கத்தினூடாக பரீட்சித்து விண்ணப்பிக்குமாறும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply