
நாட்டில் நாளைய தினமும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயா தினம் காரணமாக இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதுடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளையில் இருந்து மீண்டும் மின் தடை ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.