ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்திருந்தார்.

இதன்படி,
மாத்தளை மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன,
அநுராதபுர மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார,
புத்தளம் மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,
காலி மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க,
கம்பஹா மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா,
குருநாகல் மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
களுத்தறை மாவட்டத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply