நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள்!

நாட்டில் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகிறது என சுட்டிக்காட்டிய அதேவேளை, தேசிய பாதுகாப்புக்கு இது பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும்.

மிலேச்ச கொலையாளிகளின் இந்தச் செயல்கள் பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றன. புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப் பெற்ற பிறகு அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க இதைவிடவும் முறையான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply