
ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் சீதுவ லியனகேமுல்ல பகுதியில் வைத்து நேற்று (12) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேபட மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் சந்தேக நபரும் 40 வயதுடைய ஆண் சந்தேக நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 568 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.