
கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (31) அதிகாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் பேராதனை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த வேளையில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.