அதிகரிக்கப்படவுள்ள பேருந்து கட்டணம்!

ஜூலை மாதத்தில் இருந்து பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

பேருந்துகள் ஏற்கனவே மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன.

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி விகிதங்களின் கீழ் பேருந்துகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.

அத்துடன் பேருந்துகளில் வற் வரியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. விரைவில் வருடாந்திர பேருந்து கட்டணம் திருத்தப்படவுள்ளது. எனவே, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் நிச்சயம் கணிசமாக அதிகரிக்கும்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து அமைச்சருடன் இதைப் பற்றி கலந்துரையாடியிருந்தோம். இப்போது இந்த ஆபத்தை நாங்கள் கடந்துவிட்டோம். நாங்கள் அவருக்கு நேரடியாகத் தெரிவித்திருக்கின்றோம்.

இதன்படி, ஜூலை மாதத்திற்குள் இந்தப் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும்.

ஏனென்றால் பேருந்துகளுக்கு வற் வரி சேர்க்கப்பட்டுள்ளது. பேருந்தின் விலை அதிகரித்துள்ளது. ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளன என்று நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம் என அவர் தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply